fbpx

நள்ளிரவில் பக்கத்து வீட்டு பெண்ணின் அறைக்குள் கணவனை அனுப்பிய மனைவி!!! கன்னியாகுமரியில் நடந்த கொடூரம்…

பக்கத்து வீட்டுப் பெண் மீது கொண்ட காம இச்சையின் காரணமாக, கணவன் கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த சமயத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் கணவனை அனுப்பி அந்த பெண்ணையும், அந்தப் பெண்ணின் மகளையும் பலாத்காரம் செய்ய வைத்த மனைவியும், அவருடைய கணவரும் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பெண் பிரியா(40). இவர் தன்னுடைய கணவரை பிரிந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். இவருடைய 17 வயது மகள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகின்றார்.

இவர்களுடைய பக்கத்து வீட்டைச் சார்ந்தவர் தான் பாஸ்கரன் (எ) பகுடு பாஸ்கரன்(35). கஞ்சா வியாபாரியான பாஸ்கரன் மீது கொள்ளை, மிரட்டல் கஞ்சா விற்பனை, போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. அத்துடன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவர் சிறைக்கு சென்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பிரியாவின் மீது அவர் காமம் கொண்டதாக தெரிகின்றது. இதனை தெரிந்து கொண்ட பாஸ்கரனின் மனைவி துர்கா(28), பிரியாவிடம் சென்று “ஏய் நீ அழகாய் இருக்கேன்னு என் கணவர் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆகவே எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. ஆகவே நீ இங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று விடு” என்று பிரியாவை மிரட்டி இருக்கின்றார். அவருடைய மிரட்டலுக்கு அஞ்சாத பிரியா, நான் எதற்காக இங்கிருந்து போக வேண்டும் என்று கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது, ஆகவே இவர்களுக்குள் பிரச்சனை தொடங்கி இருக்கிறது.

இந்தப் பிரச்சனைக்கு பின்னர் தான் அந்த கொடூரம் நடந்தேறியுள்ளது. துர்கா சில தினங்களுக்கு முன், கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த தன்னுடைய கணவன் பாஸ்கரனை இரவு நேரத்தில் பிரியாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. கதவு தட்டும் சத்தம் கேட்டவுடன் பிரியா வந்து கதவை திறந்த உடனேயே கணவனை உள்ளே அனுப்பிவிட்டு வெளிப்புறமாக துர்கா தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு பிரியாவின் வீட்டிற்குள் சென்றவுடன் பாஸ்கரன் கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டி பிரியாவை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பிறகு பிரியாவை ஒரு அறையில் தள்ளி பூட்டிவிட்டு, அவருடைய 17 வயது மகளையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படி ஒரு கொடூரமான செயலை செய்தது மட்டுமல்லாமல், அதனை தன்னுடைய கைபேசியில் காணொளியாக எடுத்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது அதனை காட்டி, மிரட்டி அவ்வப்போது பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தன்னுடைய பொறுமையை முற்றிலுமாக இழந்த பிரியா, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். அந்த புகாரினடிப்படையில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் பாஸ்கரணையும், இதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்த அவருடைய மனைவி துர்காவையும் கைது செய்திருக்கிறார்கள்.

Kathir

Next Post

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்ற மனைவி! போலீசில் சிக்கியது எப்படி?

Sun Dec 4 , 2022
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சார்ந்த 45 வயதான தொழிலதிபர் கமல்காந்த் ஷா, இவர் சென்ற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அந்தேரியில் இருக்கின்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அந்தேரி மருத்துவமனையில் இருந்து மும்பை மருத்துவமனைக்கு சென்ற செப்டம்பர் மாதம் 3ம் தேதி திடீரென்று மாற்றப்பட்டார். அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வந்த […]

You May Like