ஹவாய் காட்டுத் தீயில் இருந்து தப்பிய ரெட் ஹவுஸ்” என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது எப்படி சாத்தியம் என்றும் பலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
ஹவாயின் Maui பகுதிகளில் ஏற்பட்ட பயங்கரமான காட்டுத்தீயில் 100 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. இருப்பினும், லஹைனாவில் உள்ள ஒரு தேவாலயம் தீப்பிழம்புகளில் இருந்து தப்பியது, அதைச் சுற்றியுள்ள மற்ற கட்டமைப்புகள் தீயில் கருகின. இதேபோல், அப்பகுதியில் இருந்த ரெட் ஹவுஸ் என்றழைக்கப்படும் ஒரு வீடு மற்றும் தீயில் சேதமடையாமல் இருந்ததையும், அதை சுற்றியுள்ள வீடுகள் அனைத்தும் தீயில் கருகியிருப்பதை கண்டு மீட்பு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த சிவப்பு கூரை வீட்டின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடு எப்படி காட்டுத்தீயில் இருந்து தப்பியது என்பதற்கு அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் இல்லை. இதுகுறித்து பேசிய அந்த வீட்டின் உரிமையாளர் தமுரா, அவரது குடும்பத்திற்கு சொந்தமான வீடு அதன் கான்கிரீட் சுவர்களால் உயிர் பிழைத்ததாக நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தனது கணவர், இந்த வீட்டிற்கு சிமெண்டைப் பயன்படுத்தி பிழைகள் மற்றும் உலர் அழுகல் ஆகியவற்றைத் தாங்கும் வகையில் கட்டடத்தை கட்டினார் என்றும், அவரது அறிவு மற்றும் அவரது கட்டுமானத் திறன் காரணமாக அது உயிர் பிழைத்துள்ளது என்று தமுரா கூறினார்.