சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யபிரியா (வயது 35). இவர் தனது மகன் தன்னை அடிக்கடி தாக்குவதாகக் கூறி மகனின் நண்பன் வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்தார். அப்போது அங்கு வசித்து வந்த மகனின் நண்பனான 17 வயது சிறுவனுடன் சத்ய பிரியா நெருங்கி பழகி உள்ளார். பின்னர் சில மாதங்கள் கழித்து சத்ய பிரியா தனது வீட்டிற்கு செல்ல தயாரானார். அப்போது 17 வயது சிறுவனையும் தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு சிறுவனின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத சத்யபிரியா சிறுவன் தன்னுடன் தான் வரவேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.
அப்போது சத்ய பிரியாவின் பேச்சில் மாற்றத்தை கண்ட சிறுவனின் பெற்றோர் சிறுவனிடம் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது சத்ய பிரியா அவ்வபோது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து இதனையே வழக்கமாகக் கொண்ட சத்ய பிரியா தனது பாலியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள சிறுவனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சத்ய பிரியா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.