fbpx

வேண்டுமென்றே 55 பேட்டரிகளை விழுங்கிய பெண்.. திகைத்து போன மருத்துவர்கள்.. பின்னர் நடந்தது என்ன..?

உலகில் அவ்வப்போது நடக்கும் சில வினோத நிகழ்வுகள் குறித்து நாம் பலரும் கேள்விப்பட்டிருப்போம்.. அந்த வகையில் மனிதர்களின் வயிற்றில் இருந்து கத்திரிகோல், ஸ்பூன் போன்ற பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.. அந்த வகையில் அயர்லாந்தில் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகள் அகற்றப்பட்டுள்ளது.. 66 வயதான அந்த பெண்ணுக்கு அயர்லாந்தில் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பெண் வேண்டுமென்றே பல பேட்டரிகளை விழுங்கியதாகவும், தனக்குத்தானே தீங்கு விளைவிக்கவே இப்படிச் செய்ததாகவும் கூறுப்படுகிறது.. இருப்பினும், அப்பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்..

முதலில், அந்தப் பெண்ணின் வயிற்றில் என்ன இருக்கிறது என்று மருத்துவர்களுக்குத் தெரியாததால், பல சோதனைகள் செய்யப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டதில், பெண்ணின் வயிற்றில் பல பேட்டரிகள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு வயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு வலி தொடங்கியது.

முதலில் இயற்கையான முறையில் அதாவது மலத்துடன் பேட்டரியை வெளியேற்ற மருத்துவர்கள் காத்திருந்தனர்.. ஆனால் ஒரு வாரத்தில் 5 பேட்டரிகள் மட்டுமே பெண்ணின் உடலில் இருந்து வெளியேறின.. ஆனால் அப்பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.. இந்த சூழ்நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிறு மற்றும் பிற உறுப்புகளில் சிக்கிய பேட்டரியை வெளியே எடுத்தனர்.

இதுவரை யாருடைய உடலிலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இவ்வளவு பேட்டரியை அகற்றியதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயம், குழந்தைகள் விளையாடும் போது கவனக்குறைவாக பேட்டரிகள் அல்லது பிற பொருட்களை விழுங்குவதாகவும், ஆனால் அவை பொதுவாக மலம் வழியாக செல்லும் என்றும், ஆனால் அந்த பெண் வேண்டுமென்றே பேட்டரியை விழுங்கியது அதிர்ச்சியளிப்பதாகவும் கூறினர். தற்போது அந்த பெண் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்..

Maha

Next Post

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை…! தமிழ் நன்றாக தெரிந்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Wed Sep 21 , 2022
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த […]

You May Like