fbpx

கணவர், மாமியாரை படுகொலை செய்து பிரிட்ஜில் வைத்திருந்த பெண்..!! எதற்காக தெரியுமா..? திடுக்கிடும் சம்பவம்..!!

அசாம் மாநிலம் கவுகாத்தி நகர் நரேந்தி பகுதியில் வசித்து வந்தவர் அமர்ஜோதி டே. இவர் தனது தாயார் சங்கரியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தனா கலிடா என்ற பெண்ணை அமர்ஜோதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவர் அமரஜோதியையும், மாமியார் சங்கரியையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார் வந்தனா. போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். இதன் பின்னர் மாமியாரின் 5 வங்கிக் கணக்கில் இருந்து அமர்ஜோதியின் தாய் மாமன் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார் என்று புகார் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்ததில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மாமியாரின் வங்கிக் கணக்கில் இருந்து வந்தனா 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதனால் போலீசருக்கு வந்தனாவின் மீது சந்தேகம் வலுத்திருக்கிறது.

சந்தேகத்தின் பெயரில் அவரை கைது செய்து விசாரணை நடத்திய போது தான் சொத்துக்காக மாமியாரையும் கணவரையும் கொலை செய்தது அம்பலமானது. அதாவது, திருமணத்திற்கு பிறகு, தன்ஜித் தேகா என்ற நபருடன் வந்தனாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால் அந்த அளவுக்கு அமர்ஜோதியை விட்டு பிரிய மனமில்லை. காரணம் அவர் ஜோதியின் தாயார் சங்கரிக்கு கவுகாத்தி நகரில் 5 கட்டிடங்கள் இருக்கின்றன. இந்த 5 கட்டிடங்களில் ஒரு கட்டிடங்களில் சங்கரி வசித்துக் கொண்டு மற்ற 4 கட்டிடங்களையும் வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்த வாடகை கணக்கை அமர்ஜோதியின் தாய் மாமன் தான் கவனித்து வந்துள்ளார். இந்த வரவு செலவுகள் எல்லாம் தன் கைக்கு வரவில்லை என்கிற ஆத்திரத்தில் இருந்த வந்தனா, இது குறித்து கணவருடன் சண்டை போட்டு வந்திருக்கிறார். ஏற்கனவே கள்ள உறவு வைத்திருந்த வந்தனா மீது அதிர்ச்சியில் இருந்த அமர்ஜோதி இது தொடர்பாக சொத்துக்காக சண்டை போட்ட வந்தனாவை விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தான் வந்தனா அருள்தாஸ் என்பவரின் துணையுடன் மாமியாரை கொலை செய்திருக்கிறார். பின்னர் உடலை 3 துண்டுகளாக வெட்டி 3 நாட்களாக பிரிட்ஜில் வைத்திருந்திருக்கிறார். அதன் பின்னர் தனது கள்ளக்காதலன் தன்ஜித் உதவியுடன் நரேந்திர பகுதியில் இருக்கும் தனது வீட்டில் வைத்து கணவர் அமர்ஜோதியை கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் வந்தனா. பின்னர் அவரின் உடலையும் துண்டு துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்திருக்கிறார். அதன் பின்னர் உடல் பாகங்களை பாலித்தீன் பைகளில் போட்டு கள்ளக்காதலன் காரில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். மேகலாயாவில் சாலையோரம் உள்ள 60 அடி வெள்ளத்தில் உடல் பாகங்களை வீசிவிட்டு வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வந்தனா கலிடா, தன்ஜித், அரூப்தாஸ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Chella

Next Post

டெலிவரி பாயை கொன்று 4 நாட்களாக உடலை பதுக்கி வைத்திருந்த இளைஞர்..!! ஐபோனுக்காக வெறிச்செயல்..!!

Mon Feb 20 , 2023
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரே நகரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஹேமந்த் தத்தா. இவர் பிளிப்கார்ட் இணையதளத்தில் இருந்து ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்திருந்ததால், டெலிவரியின்போது ரூ.46,000 கொடுக்க வேண்டி இருந்தது. பிப்ரவரி 7ஆம் தேதி ஹேமந்த் நாயக் என்பவரை ஐபோனை டெலிவரி செய்ய தத்தாவின் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அப்போது தத்தாவிடம் போனை வாங்குவதற்குத் தேவையான பணம் […]

You May Like