உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் 45 வயதான பிஹாரி லால் என்பவர் செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார்.. அவர் தினமும் ரூ.600-800 சம்பாதித்து வருகிறார்.. இந்நிலையில் பிஹாரி லால், கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள தனது ஜன்தன் கணக்கில் இருந்து ரூ.100 எடுக்கச் சென்றார், ஆனால் அவரின் வங்கிக்கணக்கில் ரூ.2,700 கோடி இருப்பதை கண்டுபிடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அவரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது..
பிஹார் லால் இதுகுறித்து பேசிய போது “ வங்கி அதிகாரி ஒருவரிடம் கணக்கை மூன்று முறை சரிபார்க்கச் சொன்னேன். உத்தியோகபூர்வ வங்கி பதிவுகளில் அவரது பெயருக்கு எதிராக பணம் காட்டப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார். அப்போது நான் எனது கணக்கை மீண்டும் சரிபார்க்கச் சொன்னேன், அதன் பிறகு அவர் அதை மூன்று முறை சரிபார்த்தார். என்னால் நம்பமுடியவில்லை என்றாலும், அவர் வங்கி அறிக்கையை எடுத்து என்னிடம் கொடுத்தார்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், அவர் வீட்டிற்கு வந்தபோது, எனது வங்கிக் கணக்கில் 126 ரூபாய் மட்டுமே இருந்தது.. வங்கியில் இருந்த கணினி பிழையால் ரூ.2700 கோடி பிஹாரி லால் வங்கிக்கணக்கில் இருந்ததாக கூறப்படுகிறது.. இது வங்கிப் பிழையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது..