இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்பு இன்று நடைபெற்றது… இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், பட்டம் வழங்கினார்.. அனைவருக்கும் வணக்கம் என்று உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.. தொடர்ந்து பேசிய அவர் “ இளைஞர்களே எனது நம்பிக்கை என்று சுவாமி விவேகானந்தார் கூறியது இன்றைக்கும் பொருந்தும்.. இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது..
கொரோனா தொற்று நூற்றாண்டுக்கு ஒரு முறை வரும் சோதனையாக அமைந்தது.. மருத்துவர்கள், விஞ்ஞானிகள் உள்பட அனைவரின் முயற்சியால் கொரோனாவில் இருந்து மீண்டோம்.. கடந்த ஆண்டில் இந்தியா, அன்னிய நேரடி முதலீடு 83 டாலராக அதிகரித்தது.. கடந்த ஆண்டில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய செல்போன் தயாரிப்பாளராக இருந்தது.. தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டு வருகிறது.. டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது.. உணவு பொருள் ஏற்றுமதியில் இந்தியா பங்காற்றுகிறது..
முந்தைய அரசு அனைத்திலும் கட்டுப்பாட்டை வைத்திருந்தது.. எங்கள் அரசு அதை மாற்றியது.. புதிய கல்வி கொள்கை மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு தருகிறது.. இளைஞர்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றியாக அமையும்..” என்று தெரிவித்தார்..