fbpx

2024 ஓர் எச்சரிக்கை!… முடிவுக்கு வருகிறது உலகம்!… பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

Baba Vanga: 2024ம் ஆண்டு 4 மாதங்கள் மட்டுமே ஆகிறது, ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு தனது 85 வயதில் இறப்பதற்கு முன், 9/11, செர்னோபில் சோகம் மற்றும் இளவரசி டயானாவின் மறைவு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உலக நிகழ்வுகளை முன்னறிவிக்கும் திறனுக்காக நன்கு அறியப்பட்ட பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரியான பாபா வங்கா 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளை வழங்கினார். அவற்றில் சில ஏற்கனவே உண்மையாகி வருகின்றன. அந்தவகையில், இயற்கை பேரழிவுகள் மற்றும் தீவிர வானிலை 2024 இல் ஏற்படும் என்று பாபா வங்கா கணித்தார்.

2024ல் கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்படலாம் என பாபா வங்கா கணித்துள்ளார். சமீபத்தில் வெளியான அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், உலகளாவிய வெப்ப அலைகள் 67 சதவிகிதம் அடிக்கடி நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலைகளின் அதிகபட்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2024ல் கடும் வெப்ப அலைகளுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவே அறிவியல் ஆய்வுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவும் பாபா வங்காவின் கணிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1996ல் பாபா வங்கா மரணமடையும் போது இணைய சேவை என்பது ஆரம்ப நிலையில் இருந்தது. ஆனால், 2024ல் சைபர் தாக்குதல் பெருமளவு நடந்தேறும் என்பதை அவர் கணித்துள்ளார். கடந்த 12 மாதங்களில், ஆப்பிள், மெட்டா மற்றும் எக்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் இணைய பாதுகாப்பு மீறல் நிகழ்வுகளை பதிவு செய்துள்ளன. 2024ல் மிக தீவிரமான பொருளாதார நெருக்கடிகளை உலகம் எதிர்கொள்ளும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

ஏற்கனவே இந்த ஆண்டு, மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தொடர்ச்சியான பணவீக்கத்துடன் போராடி வருகின்றனர். மந்தமான உள்நாட்டு நுகர்வு காரணமாக 2023 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் ஜப்பான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சீனாவும் பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. ஐரோப்பாவில் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் பாபா வங்கா எச்சரித்துள்ளார். மட்டுமின்றி முதன்மை நாடொன்று உயிரியல் ஆயுதங்களை சோதனை அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்தும் என்றும் 2024 தொடர்பில் பாபா வங்கா கணித்துள்ளார். பாபா வங்காவின் கணிப்புகள் 5079ம் ஆண்டுடன் முடிவடைவதால், உலகம் முடிவுக்கு வரும் என்றே விளக்கமளிக்கப்படுகிறது.

Readmore: Result: வெளியான தேர்வு முடிவுகள்…! மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு…!

Kokila

Next Post

Schools: தனியார் பள்ளி வாகனங்களில் இனி CCTV கட்டாயம்...! அதிரடியாக வந்த உத்தரவு...!

Thu Apr 4 , 2024
தனியார் பள்ளி வாகனத்தில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும். இது குறித்து தனியார் பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அனைத்து வாகனங்களிலும் பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளி வாகனத்தில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க நியமிக்க […]

You May Like