fbpx

இராமாயணத்துக்கு முன்பே தோன்றிய உலகின் முதல் சிவன் கோயில்.. ஆச்சரியம் தரும் வரலாறு..!! எங்க இருக்கு தெரியுமா..?

உலகத்தில் தோன்றிய முதல் சிவன் கோவில், முதல் நடராஜர் தோன்றிய ஊர், உலகில் உள்ள பல்வேறு ரிஷிகளும் முனிகளும் வாசம் செய்த ஸ்தலம், ‘தென்னானுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற மகா வாக்கியம் உருவான இடம் – இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இடம் இந்த மங்களநாத சுவாமி திருக்கோயில்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் முதல் சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் ஊர் என்றும் போற்றப்படுகிறது. இந்த கோயில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குவதாகவும் கூறுகிறார்கள்.

கோயில் அமைப்பு : இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஏழு நிலை ராஜகோபுரங்கள் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்களைக் கொண்டது. 6 அடி உயரத்தில் மரகதத்தால் செய்யப்பட்ட நடராஜர் மரகததிருமேனி சந்தனக்காப்பில் காட்சி அளிக்கிறார். பெரிய மரகத பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் தரிசிக்கலாம்.

கோயில் சிறப்புகள் : தாழம்பூ வைத்து எந்தவொரு சுவாமியையும் வழிபடுவது கிடையாது, ஆனால் இங்கு தாழம்பு வைத்து வழிபடப்படுகிறது. தாழம்பூ வைத்து வழிபடுவதால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்பது ஜதீகம். ராவணனின் மனைவி மண்டோதரி இங்கு சாமி தரிசனம் செய்து வேண்டியபிறகு தான் திருமண தடை நீங்கி ராவணனை மனம் முடிந்ததாகவும் மங்களநாதர் ஆலயத்தை ராமாயணத்திற்கு முற்பட்ட சிவாலயம் என்றும் கூறுகின்றனர்.

மறுபிறவி அளிக்கக் கூடிய இத்திருத்தலம், பாவம், புண்ணியம் பார்க்காமல் அனைவருக்கும் மறுபிறவி அளிப்பதாக மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘தென்கைலாயம் (தென் கயிலாயம்)’, ‘ஆதிகாலத்து சிவாலயம் ’ மற்றும் உலகின் முதல் சிவாலயம் இதுவென கூறுகின்றனர். இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் செய்யப்பட்டது.

Read more ; அரசு பள்ளிகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதா? அன்பில் மகேஷ் பேச்சுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்..!!

English Summary

The world’s first Shiva temple that appeared before Ramayana.. Surprising history.

Next Post

செக்... 100 நாள் வேலை திட்ட வருகை பதிவு... மொபைல் மூலம் கண்காணிக்கும் நடைமுறை...! புகார் தெரிவிக்க செயலி...

Thu Jan 2 , 2025
100-day work plan... Mobile monitoring procedure

You May Like