fbpx

உலகிலேயே மிக மோசமான காற்று..!! மோசமான 10 நகரங்கள்..!! இந்தியாவில் எந்தெந்த நகரம்..?

காற்று மாசுபாட்டில் உலகின் மிக மோசமான 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி வழக்கம்போல முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ’ஐக்யூ ஏர்’ என்ற அமைப்பின் கண்காணிப்பின்படி, தீபாவளிக்கு முன்னர் டெல்லியின் காற்று மாசு, அதன் தரக் குறியீடு அளவில் 420 என்பதாக இருந்தது.

இந்த மோசமான நகரங்களின் டாப் 10 பட்டியலில் கூடுதலாக 2 இந்திய நகரங்கள் இணைந்துள்ளன. காற்று தரக்குறியீடு 196 என்றளவில் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது கொல்கத்தா. மற்றொரு இந்திய பெருநகரமான மும்பை காற்று தரக் குறியீடு 163 என்றளவில் 8-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. காற்று மாசுவில் மோசமான டாப் 10 நகரங்களில் டெல்லி மட்டுமே இருந்துவந்த சூழலில் புதிதாக கொல்கத்தா, மும்பை இணைந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ஊர்கூடி பட்டாசுகளை வெடித்ததில் காற்று மாசு உச்சம் பெற்றுள்ளது. காற்று தரக்குறியீடு அளவைப் பொறுத்து, டெல்லியில் உள்ளதைப் போன்று 400 – 500 என்றளவுக்கு மோசமடைவது ஆரோக்கியமான மக்களையும் பாதிக்கக்கூடியது. ஏற்கனவே நோயுற்றவர்களை தீவிரமான பாதிப்புகளுக்கு ஆளாக்கக்கூடியது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தீவிர சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு மோசமானது.

டெல்லியின் காற்று தரக்குறியீடு தீபாவளி அன்று 680 என்ற அளவுக்கு மோசமடைந்தது. தடிமனான போர்வை போன்று புகை மூட்டம் உருவாகி தலைநகரை அச்சுறுத்தியது. மும்பை, கொல்கத்தாவில் உள்ளதைப் போன்று, 150 – 200 என்றளவில் காற்று தரக்குறியீடு அமைந்திருப்பது, ஏற்கனவே ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் இதயத்தில் பிரச்சனை உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை தரக்கூடியது. 0 – 50 என்றவில் காற்று தரக்குறியீடு அமைவது மட்டுமே, உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அளவாக உள்ளது.

Chella

Next Post

மாணவர்களை குறிவைக்கும் நடிகர் விஜய்..!! 2026இல் கப்பு அடிச்சிருவாரு போலயே..!!

Mon Nov 13 , 2023
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் முழு டார்கெட் மாணவர்கள் தான். அவர்களின் வாக்குகளை கைப்பற்றவே அவர் முனைப்பு காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம் தனது பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் இருந்து தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண் எடுத்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளை […]

You May Like