தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பில்பருத்தியைச் சேர்ந்த இளைஞருக்கு 27 வயது ஆகிறது. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடன் தொகை வசூலிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வங்கி ஊழியருக்கும், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் அக்காள் கணவர் தானே, என கொழுந்தியாளான 16 வயதான பாலிடெக்னிக் மாணவி சகஜமாக பழகி வந்துள்ளார்.
இதற்கிடையே, வங்கி ஊழியரின் மனைவி கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில், தன் மனைவி கர்ப்பமான பிறகு அவரது காம பார்வையை கொழுந்தியாள் மீது பாய்ந்தது. வெள்ளந்தியாக மாமா.. மாமா.. என பழகிய சிறுமியிடம் ஜாலியாக பேசி வந்துள்ளார். மனைவிக்கு சந்தேகம் வராத அளவிற்கு கொழுந்தியாளருக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார் வங்கி ஊழியர். பின்னர், அவரது வலையில் 16 வயது மாணவி விழுந்தார். ஆட்கள் இல்லாத வனப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் உணர்வை தூண்டி விட்டு உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.
அக்காள் கணவர் இப்படி தன்னை செய்ததை உடனே அந்த சிறுமி வீட்டில் சொல்லவில்லை. ஒரு கட்டததில் 16 வயது மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, பரிசோதித்து பார்க்கையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பெற்றோர் அழைத்து கேட்ட போதும் சொல்ல மறுத்த சிறுமி ஒரு கட்டத்தில் கர்ப்பத்துக்கு காரணம் அக்காள் கணவர் தான் என குண்டை தூக்கி போட்டு அதிர வைத்தார். கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய அக்காள் மாப்பிள்ளையோ தலைமறைவானார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த தனியார் வங்கி ஊழியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருமணமான 6 மாதத்தில் அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையல், காம பார்வையால் கொழுந்தியாளை வீழ்த்தி அவரையும் இரண்டு மாத கர்ப்பமாக்கிய வங்கி ஊழியரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.