fbpx

இந்திய பிரம்மோஸ் ஏவுகணைகளின் ரகசியங்களை களவாடிய இளம் விஞ்ஞானி-க்கு ஆயுள் தண்டனை!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக, இந்திய பிரம்மோஸ் ஏவுகணைகளின் ரகசியங்களை களவாடிய இளம் விஞ்ஞானி ஒருவருக்கு, நாக்பூர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

DRDO மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyenia ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸில் சிஸ்டம் இன்ஜினியராக இவர் பதவி வகித்து வந்தார். இந்த அமைப்பு இந்தியாவின் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. இது நிலம், வான், கடல் மற்றும் நீருக்கடியில் உள்ள தளங்களில் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு நிஷாந்த் அகர்வால், பிரம்மோஸ் ஏவுகணை குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு பிரம்மோஸ் ஏரோஸ்பேஸைப் பாதித்த முதல் உளவு ஊழலாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் உளவுத்துறை முகவர்களால் இஸ்லாமாபாத்தில் இருந்து இயக்கப்பட்டதாக நம்பப்படும் நேஹா ஷர்மா மற்றும் பூஜா ரஞ்சன் ஆகிய இரண்டு முகநூல் சுயவிவரங்கள் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன் நிஷாந்த் அகர்வால் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்ற நிஷாந்த் அகர்வால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது அவருடைய சகாக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமையான பொறியியலாளராகக் கருதப்படும் நிஷாந்த் அகர்வால், குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு சார்பாக உளவு பார்த்ததாக கூறிய குற்றச்சாட்டில், முன்னாள் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாக்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்ததும், ஃபேஸ்புக் தோழிகளாக அறிமுகமான இரு பெண்களிடம் வழிந்ததும் நிஷாந்த் அகர்வாலை பெரும் இக்கட்டில் மாட்டி விட்டிருக்கிறது. அவருக்கு எதிரான வழக்கு விசாரணையின் முடிவில், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.வி.தேஷ்பாண்டே, தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நிஷாந்த் அகர்வால் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். 

Read more ; “அவரால் தான் இன்று நான் இப்படி இருக்கிறேன்” நடிகை ஸ்ருதிஹாசன் எமோஷனல் போஸ்ட்!

English Summary

english summary

Next Post

பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்கள் கவனத்திற்கு!! துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - ரீசெண்ட் அப்டேட்!

Mon Jun 3 , 2024
english summary

You May Like