சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (67). இவருடைய தம்பி சிகாமணியின் மகன் செல்வராஜ் (30). இவர், கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குடிபோதைக்கு அடிமையான செல்வராஜ், வீட்டில் உள்ளவர்களிடமும், வெளியில் கடன் வாங்கியும் மது அருந்தி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று தன்னுடைய பெரியப்பா பெரியசாமியிடம், மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததுடன், செல்வராஜை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், பெரியசாமியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பின்னர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பெரியசாமியின் தலையை ஆட்டை அறுப்பது போன்று கொடூரமாக அறுத்து தலையை துண்டித்தார்.
இதில், ரத்த வெள்ளத்தில் பெரியசாமி துடி துடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியப்பாவை கொலை செய்த செல்வராஜ், கத்தியுடன் அவரது உடல் அருகிலேயே எதுவும் தெரியாதது போல் அமர்ந்திருந்தார். அதேநேரத்தில் அங்கிருந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சம்பவம் செல்வராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும், பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, செல்வராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
Read More : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது..!! தலைவர் விஜய் அறிவிப்பு..!!