fbpx

கொய்யா கேட்டு வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்..!! திடீரென கேட்ட இளம்பெண்ணின் அலறல் சத்தம்..!! பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!!

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக இளைஞர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள துப்ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துப்ராஜ்பூர் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பெண் ஏற்கனவே துப்ராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் தப்பியோடிய நிலையில், அவரை வலைவீசி தேடும் பணியை காவல்துறையினர் முடக்கிவிட்டுள்ளனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. அந்த இளைஞர் ஆரம்பத்தில் கொய்யாவைக் கேட்டு பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணின் தாய் அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றிருந்தார். பெண் தனியாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி அந்த இளைஞர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலால் ஆரம்பத்தில் திகைத்துப் போன அந்த பெண், நிலைமையை விரைவாக புரிந்துகொண்டு சத்தம் போட ஆரம்பித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறிது நேரம் கழித்து அவரது குடும்பத்தினர் திரும்பி வந்தபோது, ​​அந்த பெண் அவர்களிடம் நடந்த முழு சம்பவத்தையும் கூறினார். உடனடியாக துப்ராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அதற்குள் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகி விட்டார்.

இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் தொடங்கியுள்ளனர். 4 நாட்களுக்கு முன்பு, துப்ராஜ்பூர் காவல் நிலையப் பகுதியில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மற்றொரு வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

Read More : பாம்பு கடியை நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு..!! இனி கட்டாயம் தெரிக்க வேண்டும்..!!

English Summary

The youth entered the house asking for Guava..!! Suddenly heard the scream of the young woman..!! The sensational incident..!!

Chella

Next Post

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்றைய விலை நிலவரம்..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

Sat Nov 9 , 2024
In Chennai, gold prices fell by Rs 80 to Rs 58,200 per bar.

You May Like