மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பூனே சார்ந்த 16 வயது சிறுமி தேர்வு எழுதுவதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜாவித் சேக் என்ற 22 வயது இளைஞர் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தன்னுடைய வீட்டில் அடைத்து வைத்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் சிகரெட்டால் சூடு வைப்பது அடிப்பது போன்ற கொடுமைகளையும் செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அந்த சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவரது குடும்பத்துடன் சிறுமியை சேர்த்து வைத்தனர். மேலும், சிறுமியை நான்கு ஆண்டுகளாக கொடுமை செய்து வந்த ஜாவித் ஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.