fbpx

#விருதுநகர் : டீக்கடை சண்டையால் ஆபாசமான முறையில் பழிவாங்கிய இளைஞர்..!

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள திருத்தங்கலில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் பணியில் இன்னும் சேரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜா டீக்கடையில் வழக்கம் போல் உட்கார்ந்திருந்த போது, அங்கு கடைக்கு வந்த இளைஞருடன் ராஜாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்த இளைஞருக்கு திருமணமானதை தொடர்ந்து அவர் கோவையில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். மனைவி, கோவை மாவட்ட பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேலை பார்க்கிறார். இதனை தெரிந்து கொண்ட ராஜா, அந்த வாலிபரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். 

இந்த நிலையில் ராஜா, அந்த இளைஞரின் மனைவி செல்போன் நம்பரை ஆன்லைனில் பதிவிட்டு, பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். மேலும் அவரை தொடர்பு கொண்டால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்று தெரியப்படுகிறது. 

இதனை பார்த்த அந்த இளைஞர் மனைவியுடன் சென்று கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட நபர் ராஜா  என உறுதி செய்தனர். அதன் பின்னர் அவரை கைது செய்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தற்போது கோவையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

Baskar

Next Post

சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டன் அறிவிப்பு…

Wed Nov 16 , 2022
அடுத்த ஆண்டிற்கான சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டன் யார் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங் தலைவர் விஸ்வநாதன் இது தொடர்பாக கூறியதாவது,’’கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங் அணியில் தோனி விளையாடாதது ஒரு துரதிர்ஷ்டம். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங் அணி கிரிக்கெட்டை ரசிகர்களுக்கு விருந்தாக்கும். இந்த முறை தோனிதான் சூப்பர் கிங் கிரிக்கெட் அணியின் கேப்டன்.’’என தெரிவித்தார். இதனிடையே டி20 […]

You May Like