மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த நபரை ஒரு காவலர் விரட்டிசென்று பிடிக்க முயன்றுள்ளார். இதனால், வாகனத்தில் சென்ற நபர் தடுமாறி கீழே விழுந்து ரத்த காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆன்லைன் மூலம் அபராத விதிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், தலைக்கவசம் அணியாமல் இருந்ததற்காக பைக்கில் சென்றவரை விரட்டி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெரும் அளவிற்கு போலீசார் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்து, காவல்துறை உயர் அதிகாரிகள், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வீட்டிற்கு காலை உணவு வாங்கிச் சென்றவர் என்றும், பைக்கை விரட்டி சென்றபோது போக்குவரத்து காவல்துறை காவலர் கார்த்திக் இரு சக்கர வாகனத்தை காலால் மிதித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.