fbpx

பள்ளி மாணவர்களை டார்கெட் செய்த இளைஞர்.. எப்பொழுதும் மயக்கத்தில் வைத்திருக்கும் போதை மாத்திரைகள் விற்பனை..!

அருப்புக்கோட்டை, காவல் நிலைய காவல்துறையினர், சொக்கலிங்கபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை பிடிப்பதற்கு சென்றனர். அப்போது தப்பி செல்ல முயன்ற அந்த இளைஞரை மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர் மதுரையை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் தீபக் ராஜ் (25) என்பதும் தெரியவந்தது.

மேலும் தற்போது அவர் அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் இவர் பள்ளி மாணவர்களை எப்பொழுதும் மயக்க நிலையில் வைத்திருக்கும், போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் தீபக் ராஜ் அந்த மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 104 போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து தீபக் ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். பள்ளி மாணவர்களை எப்பொழுதும் மயக்கத்திலேயே வைத்திருக்கக்கூடிய மாத்திரைகளை விற்பனை செய்ததற்காக, இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

காமன்வெல்த் 2022..! பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்..!!

Wed Aug 3 , 2022
காமன்வெல்த் போட்டியில் எடைத்தூக்கும் பிரிவில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, […]
காமன்வெல்த் 2022..! பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்..!!

You May Like