தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடியில் பகுதியில் ஸ்ரீபாலசுப்பிரமணியசாமி என்ற கோவில் அமைந்து இருக்கின்றது. இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நிகழ்ந்து வந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஆய்க்குடியில் உள்ள சிவன் கோவின் திடலில் நடைபெற்றது.
சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளித்து , சூரபத்மன் உள்ளிட்ட சூரர்களை வதம் செய்தார். இந்நிகழ்ச்சியில், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த தருணத்தில் ஏற்பட்ட அதிக கூட்ட நெரிசலில் சிக்கி கருப்பசாமி என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரை அருகில் உள்ள தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பசாமி ஏற்கனவே உயிரிழந்தாக கூறினார். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.