fbpx

தாமரை விதையை பாலில் கலந்து குடித்தால் பல நன்மைகள்..!! இதயநோய், சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வு..!! ஆராய்ச்சியில் வெளிவந்த தகவல்..!!

தாமரை பூ பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத அறிஞர்களும் மருத்துவர்களும் தாமரைப்பூவை உணவாக உட்கொள்வதால் பல நன்மைகள் இருப்பதாக சொல்கின்றனர். இந்த தாமரை மலர் இந்தியாவில் 7,000 ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தாமரை விதையை பாலில் கலந்து இரவில் குடித்து வந்தால், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இப்போது அது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

எடை குறைத்தல்

உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. 2011இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி இது நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டியது. தாமரை விதைகளில் உள்ள பாலிபினால்கள் இந்த குணத்தை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மனச்சோர்வு தற்போதைய உடல்நலப் பிரச்சனைகளில் அதிகம். தாமரை விதைகளில் சபோனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. அவை மனச்சோர்வைக் குறைக்கின்றன. தூக்கத்தை சரியாக சமநிலைப்படுத்தும்.

இதய நோய்கள்

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடுகிறது. தாமரை விதைகளுக்கு இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

நார்ச்சத்து

நார்ச்சத்து தாமரை விதையில் செரிமானத்திற்கு தேவையான அளவு உள்ளது. மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகள் பாலுடன் கலந்து சாப்பிட்டால் நீங்கும். பாலில் இருப்பது போல், தாமரை விதைகளிலும் கால்சியம் நிறைந்துள்ளது. இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால், உடல்நலக் கோளாறுகள் ஏற்படாது என்பது ஐதீகம்.

நோய் எதிர்ப்பு சக்தி

தாமரை விதையில் உள்ள கால்சியம், புரோட்டீன்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவற்றை பாலில் சேர்த்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்.

வலி நிவாரணி

தாமரை விதையில் உள்ள ஃபிளாவனாய்டுகள் வலி நிவாரணியாகவும் செயல்படுகின்றன.

Read More : சென்னை IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு..!! ரசிகர்களுக்கு கட்டுப்பாடு..!! மெட்ரோ ரயிலில் இலவச பயணம்..!!

English Summary

The flavonoids in lotus seeds also act as pain relievers.

Chella

Next Post

நரம்பு தளர்ச்சி முதல் ஆண்மை குறைபாடு வரை..!! முருங்கையின் அற்புத பலன்கள் பற்றி தெரியுமா..?

Tue Mar 18 , 2025
பொதுவாக காய்கறிகளில் முருங்கைக்காய் என்பது மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த காயாக கருதப்பட்டு வருகிறது. நம் முன்னோர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் உயிர் வாழ்ந்ததற்கு முருங்கைக்காயும், முருங்கைக் கீரையும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. “முருங்கையை நொறுங்க தின்றால் முன்னூறும் போகும்” என்பது நம் முன்னோர்களின் பழமொழி. இதற்கேற்றார் போல் முருங்கை காய் மற்றும் கீரையை நன்றாக கடித்து சாப்பிடும் போது 300 வகையான நோய்களும் நம் […]

You May Like