fbpx

’தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை’..! வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தேசியக்கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சுதந்திர தின 75-வது அமுத பெருவிழாவையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையே, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

’தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை’..! வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

அதில், “நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், தேசியக்கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேசியக்கொடி வாங்குமாறு நுகர்வோரை வலியுறுத்தக்கூடாது. இதனை உறுதிபடுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

”தேவைப்பட்டால் தைவான் மீது போர் தொடுப்போம்”..! சீனா பகிரங்க எச்சரிக்கை

Thu Aug 11 , 2022
’தேவைப்பட்டால் தைவான் மீது போர் தொடுப்போம்’ என்று சீனா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. இதன் காரணமாக தைவான், சீனா இடையே தொடர்ந்து பதற்றம் […]
”தேவைப்பட்டால் தைவான் மீது போர் தொடுப்போம்”..! சீனா பகிரங்க எச்சரிக்கை

You May Like