fbpx

இன்னும் 9 நாட்கள் தான் உள்ளது.. இந்த பணிகளை முடிக்கவில்லை எனில் சிக்கல்…

வரும் மார்ச் 31-ம் தேதியுடன் 2022-23 நிதியாண்டு முடிவைடகிறது… எனவே மார்ச் மாதம் பல நிதி தொடர்பான பணிகளுக்கான கால அவகாசமும் முடிவடைய உள்ளது.. இந்த காலக்கெடுவுக்குள் அந்த பணிகளை முடிக்கவில்லை எனில், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.. அல்லது பிற விளைவுகளை சந்திக்க வேண்டும். இந்த மார்ச் 31, 2023க்குள் முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்..

பான்-ஆதார் இணைப்பு: மார்ச் 31, 2023க்குள் உங்கள் பான் எண்ணுடன் கட்டாயம் ஆதாரை இணைக்க வேண்டும் என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.. இந்த காலக்கெடுவிற்குள் பான் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், ஏப்ரல் 1 ஆம் தேதி பான் அட்டை செயலிழந்துவிடும். மேலும் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க தவறிய நபர்கள் அபராதமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

முன்கூட்டிய வரி செலுத்துதல்: முன்கூட்டிய வரி செலுத்துதலின் (Advance Tax Payment) இறுதி தவணை மார்ச் 15, 2023 அன்று செலுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அன்றைய தினம் ஏதேனும் வங்கி மூடப்பட்டிருந்தால், வரி செலுத்துவோர் அடுத்த வேலை நாளில் முன்கூட்டிய வரி செலுத்த வேண்டும். ஒருவேளை இந்த முன்கூட்டிய வரி செலுத்த தவறினால், வரி செலுத்துபவர் 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 234B மற்றும் 243Cன் கீழ் அபராதம் செலுத்த நேரிடும்.

PMVVY திட்டம் : பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (Pradhan Mantri Vaya Vandana Yojana – PMVY என்பது மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு ஓய்வூதிய திட்டமாகும். எல்.ஐ.சி இந்த ஓய்வூதியத் திட்டத்தை ஓய்வூதியத்திற்கு பிந்தைய நிதித் திட்டமிடலுக்கான காப்பீட்டாளரின் தேவையைப் பூர்த்தி செய்ய வழங்குகிறது. ஒரு மூத்த குடிமகன் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம், மார்ச் 31, 2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும். 10 ஆண்டுகளுக்கு PMVVY திட்டம் 7.4 சதவீத வட்டி விகிதத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தின் கிழ் மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் சந்தாதாரர் ஓய்வூதியம் பெறலாம்.

வருமான வரி கணக்கு தாக்கல் : 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆகும். வரி செலுத்துவோர் 2020 நிதியாண்டில் ITR ஐத் தாக்கல் செய்யும் போது குறிப்பிட்ட வருமான விவரங்களைத் தவிர்த்துவிட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் பிழை செய்திருந்தாலோ புதுப்பிக்கப்பட்ட வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

படிவம் 12BB : ஊழியர்கள், 12BB படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆகும். சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களும் தங்கள் முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள் அல்லது தள்ளுபடிகளைப் பெற இந்தப் படிவத்தை தங்கள் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பயணச் சலுகைகள் (LTC) மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி ஆகியவை ஆவணங்கள் அந்த படிவத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

வரி சேமிப்பு முதலீடு : மார்ச் 31, 2023க்கு முன் வரி சேமிப்பு முதலீடுகளை செய்ய வேண்டும். மேலும் 2023 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது பழைய வருமான வரி முறையின் கீழ் விலக்கு பெற முடியும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் ஒரு பகுதியாக, வரி செலுத்துவோர் பழைய வரியில் இருந்து ரூ. 1.5 லட்சம் வரையில் விலக்கு பெறலாம்.

Maha

Next Post

தமிழகமே...! இன்று மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டம்...! என்னென்ன செய்ய வேண்டும்...? முழு விவரம்

Wed Mar 22 , 2023
இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகளின் எண்ணிக்கை இவ்வருடம் 4-லிருந்து 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக, இன்று உலக தண்ணீர் தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்திற்கான இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜல்சக்தி […]

You May Like