fbpx

பிக்பாஸ் எலிமினேஷன்… இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு குட் பாய் சொன்ன பெண் போட்டியாளர் இவர்தான்..!!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் எட்டு நிகழ்ச்சியின் இந்த வார எலிமினேஷனில் முதல் முறையாக பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 18 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 9 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் வார இறுதியில் ரவீந்தர் சந்திரசேகரும், இரண்டாவது வார இறுதியில் அர்னவ்வும் எலிமினேட் செய்யப்பட்டனர்.

இதையடுத்து தற்போது எஞ்சியுள்ள 16 போட்டியாளர்கள் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்த வாரம் நடந்த நாமினேஷனில் முத்துக்குமரன், செளந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா குப்தா, பவித்ரா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். பெண்கள் அணியில் பவித்ராவிற்கு நாமினேஷன் பாஸ் வழங்கி சேவ் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வார எலிமினேஷனுக்கான வார இறுதி இன்று வந்துவிட்டது. விஜய் சேதுபதி இந்த வாரம் நடந்த சர்ச்சைகளில் எதைப்பற்றி பேச போகிறார் யாரை காவு வாங்க போகிறார் என பல கேள்விகள் ரசிகர்களிடம் இருக்கிறது. இந்த நிலையில் இன்று எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சத்யா, அன்சிதா மற்றும் தர்ஷா மூவரும் டேஞ்சர் சோனில் இருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த வாரம் முழுக்க ஹோட்டல் டாஸ்க் நடைபெற்ற நிலையில் தர்ஷா குப்தா தன்னைக் காப்பாற்றி கொள்ளும் அளவிற்கு பெரியளவு எதுவும் செய்யவில்லை என பிக்பாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் ஆண்கள் அணியிடமும் பெண்கள் அணியிடமும் மாற்றி மாற்றி பொய் பேசியது ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. இந்த வார எலிமினேஷனில் தர்ஷா குப்தா வெளியேறி இருக்கிறார்.

Read more ; பெரும் சோகம்..!! விஜய் சொல்லியும் கேட்கல..!! தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞர் பரிதாப பலி..!!

English Summary

There are reports that a female contestant has walked out of Bigg Boss Season 8 hosted by Vijay Sethupathi this week.

Next Post

பயணிகளே இதை கவனிச்சிருக்கீங்களா..? ரயில் பெட்டிகள் ஏன் இந்த நிறங்களில் இருக்கிறது..? சுவாரஸ்ய தகவல்..!!

Sun Oct 27 , 2024
Do you know why train coaches are painted in different colors..? You can see about it in this post.

You May Like