fbpx

VASTU TIPS : இந்த திசையில் மட்டும் கடிகாரத்தை மாட்டாதீர்கள்.. வீட்டில் பிரச்சனை தான் வரும்..!!

கடிகாரம் இல்லாத வீடு இருக்காது. தாத்தா பாட்டி காலத்தில் கடிகாரம் என்பது அத்தியாவசிய பொருளாக மட்டுமின்றி ஆடம்பர பொருளாகவும் கவுரவத்தை வெளிப்படுத்தும் பொருளாகவும் கடிகாரம் இருந்துள்ளது. விலை உயர்ந்த மரத்தால் செய்யப்பட்ட கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பார்கள். இன்றைக்கு செல்போனில் நேரம் பார்த்தாலும் ஒவ்வொருவர் வீட்டிலும் கடிகாரத்தை வைத்திருக்கின்றனர். நம்முடைய வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டி வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கடிகாரத்தை மாட்டுவதற்கு என்று சில குறிப்பிட்ட திசைகள் உள்ளன. எந்த திசையில் கடிகாரத்தை மாட்ட வேண்டும் என்று பார்க்கலாம். சிலர் ஊசலாடும் கடிகாரத்தை வைத்திருப்பார்கள். பெண்டுலம் சீராக ஆடிக்கொண்டே இருக்கும். அந்த ஊசல் கடிகாரங்கள் உயிரோட்டமானவை அதனை கிழக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்கலாம். கிழக்கு திசை

* வாஸ்து படி, வீட்டின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு சுவரில் கடிகாரத்தை மாட்ட வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு சுவரில் இடம் இல்லை என்றால், நீங்கள் மேற்கு சுவரில் கடிகாரத்தை மாட்ட வேண்டும். ஆனால், கடிகாரத்தை தெற்கு சுவரில் மாட்ட கூடாது. இது எதிர்மறை ஆற்றலை உங்கள் வீட்டிற்குள் கொண்டுவரும்.

* கடிகாரம் எப்போதுமே ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓடாத கடிகாரமாக இருந்தாலோ ரிப்பேர் ஆன கடிகாரமாக இருந்தாலோ அது எவ்வளவுதான் அழகான கடிகாரமாக இருந்தாலும் அதனை சுவற்றில் மாட்டி வைக்கக் கூடாது. மேலும், கடிகாரத்தின் கண்ணாடி உடைந்திருந்தாலும் மாட்டி வைக்கக் கூடாது.

* ஒரு சில வீட்டில் கடிகாரத்தின் நேரத்தை அரை மணி நேரம் வரை அதிகமாக வைத்திருப்பார்கள். ஒரு சிலர் வீட்டில் தாமதமாக ஓட வைத்திருப்பார்கள். பொதுவாக கடிகாரத்தை சரியான நேரத்தை காட்டும் வகையில் வைத்திருக்க வேண்டும். அதிக பட்சம் 10 நிமிடம் வரைக்கும் அதிகமாக வைக்கலாம். ஒருபோதும் கடிகாரத்தை லேட்டாக ஓட விடக்கூடாது. ஏனென்றால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து பண வருமானத்தை குறைத்து விடும்.

* கடிகாரத்தை கதவுக்கு மேல் தொங்கவிடக் கூடாது. இது உங்கள் வீட்டில் பெரும் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும். கிழக்குத் திசை என்பது சொர்க்கத்தின் அதிபதி இந்திரனின் திசை. இந்திரன் தேவாதி தேவன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் இந்திரனுக்குள் அடக்கம் என புராணங்கள் விவரிக்கின்றன.

* வீட்டில் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்க வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும்.

* கிழக்கு சுவற்றில் நீங்கள் மாட்டும் கடிகாரம், பிரவுன் கலர் அதாவது மரச்சாமான்களின் வண்ணத்தில் இருந்தால் மிகவும் நல்லது. கிழக்கு பக்கம் மாட்டும் கடிகாரத்தை வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் மாற்றிக் கொள்ளலாம்.

* பொதுவாகவே நம்முடைய வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய திசை வடக்கு. இது குபேரன் ஆளும் திசை. வடக்கு சுவற்றில் கடிகாரம் மாட்டினால் செல்வ வளம் பெருகும். பொருளாதார நிலை உயரும். பண கஷ்டம் நீங்கும். வடக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்கும் கடிகாரம் வட்ட வடிவத்தில் இருப்பது அதிக பலனை கொடுக்கும்.

* கிழக்கு மற்றும் வடக்கு பக்க சுவர்களில் கடிகாரத்தை மாட்ட முடியாதவர்கள் மேற்கில் மாட்டி வைக்கலாம். ஒருபோதும் தெற்கு சுவரில் கடிகாரத்தை மாட்ட கூடாது.

* குறிப்பாக, கடிகாரத்தின் நிறத்தையும் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், வாஸ்துவின் படி நீலம், கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது நல்ல பலனைத் தராது.

* வீட்டில் கடிகாரத்தை மூடியிருந்தால் நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் சுற்று சுவர் கடிகாரத்தை வைக்க முயற்சிக்கவும். இது வாஸ்துவில் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

* படுக்கையறையில் படுக்கையின் தலைக்கு அருகில் ஊசல் கடிகாரங்கள் மற்றும் கடிகாரங்களை ஒருபோதும் வைக்கக் கூடாது. இந்த சிறப்பு வாஸ்து குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால், உங்கள் குடும்பத்தின் வாழ்வில் நிச்சயமாக அமைதி வரும்.

Read more ; ‘மாத்திரை வாங்க காசு தரேன்னு ரூம்க்கு வர சொன்னான்..!!’ கொஞ்ச நேரத்துல அலறிய பாட்டி.. பேரன் செய்யுற வேலையா இது..!

English Summary

There are some specific directions to wind the clock. Let’s see which direction the clock should be placed.

Next Post

பெரும் சோகம்!. பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார்!. பிரதமர் மோடி இரங்கல்!

Wed Nov 6 , 2024
Popular Bhojpuri singer Sarada Singha passed away!. Condolences to Prime Minister Modi!

You May Like