fbpx

இரவில் தூக்கம் இல்லாமல் தவிக்கிறீங்களா? நிம்மதியாக தூங்க ஆன்மீகம் சொல்லும் டிப்ஸ் இதோ..

உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும், ஓர் இயற்கையான வழிதான் தூக்கம். ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது. தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இரவு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்பவர்கள் எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் மகிழ்ச்சி, அமைதி, நிம்மதியான தூக்கம் ஆகியவை கிடைப்பதற்கு ஆன்மிகத்தில் மிக எளிய வழிகள் உள்ளன. நிம்மதியான தூக்கத்தை தேடுபவர்களுக்கான எளிய வழிகள் இதோ…

தியானம் : பழங்காலமாக ஆன்மிகத்தில் பயிற்சி செய்யப்பட்டு வரும் தியானம் குறித்த விழிப்புணர்வு தற்போது தான் மக்களிடம் வர துவங்கி உள்ளது. இந்த தியான கவனச்சிதறல் ஏற்படாமல் ,மனதை ஒருமுகப்படுத்த தான் பயன்படுகிறது என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உடலையும், மனதையும் ஒன்றாக செயல்பட வைத்து மன அழுத்தத்தை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. தியானம் செய்வதால், ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் மனது அமைதி அடைகிறது. இந்த மன அமைதியுடன் தூங்கச் சென்றால் கஷ்டப்படாமல் எளிமையாக தூங்கி விடலாம். ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது.

புத்தகங்கள் வாசித்தல் : புத்தகம் படிப்பது என்பது இப்போது இல்லாமலேயே போய் விட்டது. ஆனால் தூங்க செல்வதற்கு முன் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை வாசிப்பதன் மூலம், நீங்கள் படித்த விஷயத்துடன் உங்களுக்கு ஒரு விதமான உறவு ஏற்படுத்தும். இது உங்களின் கனவுகள், லட்சியங்கள் போன்றவற்றை ஆன்மிக வழியிலேயே எடுத்துச் செல்லும். உங்களின் எண்ணங்கள், கற்பனைகள், கவலைகள் அனைத்தையும் மாற்றி, உங்களை வேறு உலகிற்கு அழைத்துச் செல்லும் உணர்வை பெற முடியும். இதனால் உள்ளுணர்வுடன் ஏற்படும் போது மனம் கவலைகளை மறந்து அமைதி அடைய துவங்கும். இது நிச்சயம் நமக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

யோகா : யோகா என்பது உடல் எடையை குறைக்க, ஆசனங்கள் செய்வதற்கு, உடலுக்கான பயிற்சி என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி, சுவாசப் பயிற்சிகள் நமக்குள் அமைதி உணர்வையும், மனம் ஒருமுகப்படும் தன்மையையும் கொண்டு வருகிறது. இது நல்ல தூக்கத்திற்கு உதவியாக அமையும். ஆய்வுகளின் படி, தினமும் யோகா செய்வதால் அவர்களின் தசைகள் நீட்டிப்பும், தளர்வையும் ஏற்படுத்துகிறது. இது உடலையும் மனதையம் சீராக இயங்க வைக்கிறது. இதனால் இரவில் நல்ல தூக்கமும், காலையில் தாமதமாக எழுவதை தவிர்த்து பகலில் சுறுசுறுப்பாக உங்களை வைத்திருக்க உதவுகிறது.ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை உங்களால் பெற முடியும்.

Read more ; இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் பாமாயில்.. இரண்டிற்கும் இடையே என்ன தொடர்பு?

English Summary

There are very simple spiritual ways to achieve restful sleep.

Next Post

ஷாக் நியூஸ்...! அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்தும் சென்னை மாநகராட்சி...!

Thu Oct 31 , 2024
Chennai Corporation triples the rent of the stadium

You May Like