fbpx

Seeman: நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடக்கிறது…! சீமான் பகீர் குற்றச்சாட்டு…!

நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடக்கிறது என சீமான் குற்றச்சாட்டு.

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனுதாக்கல் செய்தது, இந்த மனு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சி, 5.7 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ளது. விதிப்படி பாராளுமன்ற தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு விண்ணப்பித்தோம் என நாம் தமிழர் கட்சி சார்பில் வாதிடப்பட்டது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேறு நபருக்கு அந்த சின்னத்தை ஒதுக்கிவிட்டோம். பொது சின்னங்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது.

மேலும் இதுபோன்ற சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டால் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யும் நிலை உருவாகும். கரும்பு விவசாயி சின்னம் வேண்டும் என்றால் கூடுதலான வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறட்டும் என தேர்தல் ஆணையம் பதிலளித்தது. இதையடுத்து, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்; நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடக்கிறது. சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது. அங்கீகாரம் இல்லாத கட்சியான பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது எப்படி…? தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே என கூறினார்.

Vignesh

Next Post

Annamalai: விதிமுறைகளை மீறிவிட்டு சீமான் என் மீது பழி சுமத்துகிறார்!… தேர்தல் ஆணையம் எப்படி சின்னம் ஒதுக்கும்!… அண்ணாமலை!

Mon Mar 4 , 2024
Annamalai: நாம் தமிழர் கட்சியின் சின்னம் கிடைக்காமல் போனதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கப்பட்டதை எதிர்தது வழக்குத் தொடருவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாம் தமிழர் […]

You May Like