சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் அச்சத்தில் வெளியேற்றம்.
சென்னை தலைமை செயலகத்தின் உல் வளாகத்தில் இருக்கக்கூடியது நாமக்கல் கவிஞர் மாளிகை. இந்த கட்டிடத்தில் மொத்தம் பத்து தளங்கள் உள்ளது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் வேளாண் துறை இயங்கி வருகிறது. இந்த தளத்தில் ஏர் கிராக் (விரிசல்) ஏற்பட்டுள்ளதை ஊழியர்கள் பார்த்து இருக்கிறார்கள், இதனைத் தொடர்ந்து பதட்டமடைந்த அனைவரும் கட்டிடத்தை விட்டு வெளியேறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான சூழல் காணப்பட்டது.
பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது வெறும் ஏர் கிராக் யாரும் பயப்படாத தேவையில்லை எனக் கூறி ஊழியர்களை திரும்பவும் பணிக்கு செல்ல அறிவுறுத்தினார். மேலும் சேதமடைந்த பகுதியை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, “கட்டிடத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை அது உறுதியாக உள்ளது. 16 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட டைல்ஸ் என்பதால் ஏர் கிராக் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக கட்டிடத்தில் விரிசல் என தகவல் பரவியுள்ளது. சேதமடைந்த டைல்ஸ்கள் ஓரிரு நாட்களில் மாற்றி தரப்படும். இதனால் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என அமைச்சர் கூறினார்.