fbpx

’நாட்டில் உணவு பற்றாக்குறை அபாயம் நிலவி வருகிறது’..!! மத்திய நிதியமைச்சர் பகீர் தகவல்..!!

நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். 5 நாள் பயணமாக அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சுவார்த்தை, அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் “இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் பேசிய நிர்மலா சீதாராமன் பல்வேறு அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டார்.

’நாட்டில் உணவு பற்றாக்குறை அபாயம் நிலவி வருகிறது’..!! மத்திய நிதியமைச்சர் பகீர் தகவல்..!!

அதில், “இந்திய பொருளாதாரமானது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. எரிபொருள், மின்சாரம், விவசாய உரத்தின் விலை கடும் உயர்வு பெற்றுள்ளது. மேலும், அவை கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஓர் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதாவது, ‘ நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Chella

Next Post

அடுத்த 5 ஆண்டுகளில் நடக்கும் பயங்கரம்..!! சென்னை நகரமே கடலுக்கடியில் மூழ்கும் அபாயம்..!!

Wed Oct 12 , 2022
சென்னையில் உயர்ந்து வரும் கடல்மட்டத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நகரின் 29 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் முதன்மையானதாக காலநிலை மாற்றம் மாறியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பல முக்கிய நகரங்கள் எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. உயர்ந்து வரும் […]
நெருங்கும் ’மாண்டஸ்’ புயல்..!! பொதுமக்களே கவனம்..!! சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு..!!

You May Like