fbpx

கருப்பு பணம் நிறைய இருக்கு .., ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம்!! கேரளாவில் நடந்த சம்பவம்..!

கோவை சரவணம்பட்டி சேர்ந்த மோட்டார் மெக்கானிக் திருவேங்கடசாமி, இவர் வேலை பார்க்கும் கம்பெனிக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சரி செய்ய வந்துள்ளார் அப்பொழுது கேரளாவை சேர்ந்த மணிகண்டன் எனது முதலாளி கார்த்தி என்பவர் கருப்பு பணம் நிறைய வைத்துள்ளார். ஆகையால் நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் தருவதாக கூறியுள்ளார் இந்த சமயத்தில் திருவேங்கடசாமி பணம் இல்லை எனக் கூறிவந்துள்ளார்.

மணிகண்டன் தொடர்ந்து மெக்கானிக் திருவேங்கடசாமிக்கு தினமும் கால் பண்ணி பணம் ரெடி ஆகி விட்டதா, வாங்கிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு பணம் கிடைக்காது, சீக்கிரம் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி திருவேங்கட சாமிக்கு தெரிந்த பைனான்சியர் கணேஷ் என்பவரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார், இதனையடுத்து கணேஷ் நான் ஒரு லட்சம் உங்களிடம் தருகிறேன் நீங்கள் பணத்தை வாங்கி வாருங்கள் நீங்கள் 50,000 எடுத்து விட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் எனக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கால் செய்து பணம் ரெடியாக உள்ளது எங்கு வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று மெக்கானிக் திருவேங்கடசாமி கேட்டுள்ளார். இதனை அடுத்து ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்திற்கு வாருங்கள் உங்களுக்கு பணம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். பணம் கிடைக்கும் ஆசையில் மெக்கானிக் அம்பராம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்துள்ளார்.

அங்கு காத்திருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு சேர்ந்த கார்த்தி மற்றும் மணிகண்டன் மெக்கானிக் திருவேங்கடசாமி வந்தவுடன் ஒரு லட்சத்தை வாங்கிவிட்டு இதில் நான்கு 500 ரூபாய் கட்டுகளில் இரண்டு லட்சம் இருக்கிறது வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கேரளா நோக்கி சென்று விட்டனர். அவர்கள் சென்றவுடன் பணம் கிடைத்த ஆசையில் பணத்தின் கட்டுகளை எண்ணிப் பார்க்க பிரித்துப் பார்த்துள்ளார் அப்பொழுது முன்பக்கம் பின் பக்கம் 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் இருந்துள்ளது மீதி அனைத்தும் வெள்ளை பேப்பர்லாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கும் இங்கும் ஓடியுள்ளார் இதனைப் பார்த்த இங்குள்ள பொதுமக்கள் என்னவென்று கேட்கும் பொழுது நான் நடந்த விஷயத்தை கூறியுள்ளார்

இதனைத் தொடர்ந்து ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் சரவணம்பட்டியை சேர்ந்த மெக்கானிக் திருவேங்கடசாமியை, ஆனைமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளை பேப்பர்களை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Kathir

Next Post

பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி!!! காரணத்தை கேட்டால்...!

Fri Dec 23 , 2022
ஹீரோ, காமெடியன், குணச்சித்ர நடிகர் போன்ற பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் எஸ்.வி.சேகர், அவர் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், சர்ச்சைகளுக்கும் பேர் போனவர். தற்போது எஸ்.வி.சேகர் பாஜகாவில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமணியி அனுமதிக்கப்பட்டுள்ளார், இது குறித்து அவரே பதிவு ஒன்றை போட்டுள்ளார், அந்த பதிவில் ” இன்று காலையில், வெர்டிகோவுடன் அடிக்கடி வாந்தியும் ஏற்பட்டதால், உடனடியாக மெட்ராஸ் […]

You May Like