போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அவர்களின் செய்தி வெளியீட்டின் படி இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் LLR (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அவர்களின் செய்தி வெளியீட்டின் படி இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் LLR (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது ஆன்லைன் சேவைகளை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்து இந்த சேவையை தொடங்கியுள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படியும், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படியும் இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55000-க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை 13.03.2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு அருகாமையிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60/- ஐச் செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR-ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.