fbpx

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!! ஆன்மீகம் சொல்வது இதோ..

இழந்த செல்வம், சரிந்த புகழ், கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம் அனைத்தையும் திரும்ப பெற எளிய பரிகாரம் உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நமக்கு சேர வேண்டிய பணம், நகை, சொத்து போன்றவை மற்றொருவர் தராமல் நம்மை ஏமாற்றி விட்டால் திரும்ப பெறுவதற்கு பல வழிகளில் முயற்சி செய்திருப்பார்கள். ஒரு சிலர் நம்பிக்கை இழந்து முயற்சியை கைவிட்டும் இருப்பார்கள். அப்படிப்பட்ட நபர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்க கண்டிப்பாக பலன் கிடைக்கும் வரை கைவிடாமல் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டும். அங்கே அமைந்துள்ள சிவபெருமானின் காவல் தெய்வமாக விளங்கும் சண்டிகேஸ்வரருக்கு வில்வமாலை படைத்து இழந்த பொருள் செல்வம், பணம் நகை எதுவாயினும் திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

பொதுவாக சிவன் கோயிலில் அமைந்துள்ள சண்டிகேஸ்வரனுக்கு காது கேட்காது. அதனால் கைத்தட்டி கும்பிட வேண்டும் என்று பலரும் கூறியிருப்பதை கேட்டிருப்போம். ஆனால் அதில் உண்மை இல்லை. சிவனின் சொத்து ( மற்றவர்களின் செல்வம்) எதையும் நான் எடுத்து செல்லவில்லை என்று சண்டிகேஸ்வரனுக்கு கை காட்டிவிட்டு வரவேண்டும் என்பதே நம் முன்னோர்கள் நம்பிக்கையாக வைத்திருந்தனர். இதுவே காலப்போக்கில் கைதட்டி விட்டு வர வேண்டும் என்று மாறிவிட்டது.

மேலும் 8 சனிக்கிழமைகள் தொடர்ந்து காலையும், மாலையும் வராகி அம்மனுக்கு கருநீலத் துணியில் வெண்கடுகு நல்லெண்ணெய் விட்டு அதனை அகலில் வைத்து தீபம் ஏற்றி வர வேண்டும். கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டிலேயே இவ்வாறு தீபம் ஏற்றி வராகி அம்மனை மனம் உருகி வேண்டினால் இழந்த செல்வம், பணம், சொத்து, நகை என எதுவாயினும் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

Read more ; Smriti Mandhana : ஒரே ஆண்டில் 1,602 ரன்கள் குவித்த வீராங்கனை.. மகளிர் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா..!!

English Summary

There is a simple remedy to regain lost wealth, fallen fame, lost property, and lost honor. Let’s see about it in detail.

Next Post

வரும் 31-ம் தேதி வரை.. கல்லூரி மாணவர்களுக்கு 4 முதல் 6 உடற்பயிற்சி கட்டாயம்...! UGC உத்தரவு

Mon Dec 23 , 2024
Until the 31st.. 4 to 6 exercises are mandatory for college students

You May Like