fbpx

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சம்பவம் இருக்கு..!! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு வட்சதீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 – 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் அன்று (டிச.25) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

10-ம் வகுப்பு தேர்வு ஆள்மாறாட்டம்.! பாஜக எம்எல்ஏ விடுதலை செல்லும்.! சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Fri Dec 22 , 2023
ஆள்மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய வழக்கில் பாஜக எம்எல்ஏ விடுதலை செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் எம்எல்ஏ கல்யாணசுந்தரத்தின் விடுதலை செல்லும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு என்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்யாணசுந்தரம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான […]

You May Like