fbpx

’இதுக்கு ஒரு எண்டே இல்லையா’..!! ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடியின் படம்..!! வலியுறுத்தும் பாஜக..!!

பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்திருந்தார். அவர், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கேட்டு கொள்கிறேன். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

’இதுக்கு ஒரு எண்டே இல்லையா’..!! ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடியின் படம்..!! வலியுறுத்தும் பாஜக..!!

கடவுளர்கள் லக்‌ஷ்மி, விநாயகரைத் தொடர்ந்து அம்பேத்கர், நேதாஜி, சத்ரபதி சிவாஜி என அடுத்தடுத்த பரிமாணமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ ராம் கதம், “பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும்” என கூறியுள்ளார். அதனை வலியுறுத்தும் விதத்தில், பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை போட்டோஷாப் மார்பிங் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Chella

Next Post

விதிமீறல் .. மெட்டா நிறுவனத்திற்கு 24.7 மில்லியன் டாலர் அபராதம்…

Thu Oct 27 , 2022
வாஷிங்டன்னில் பிரசார நடைமுறை சட்டத்தின்படி விதிகளை மீறியுள்ளதாக மெட்டா நிறுவனத்திற்கு 24.7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன்னில் ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு பிரசார நிதி வெளிப்படுத்துதல் சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறியதாக வாஷிங்டன்னின் கிங்கவுண்டி உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அபராதம் என தெரிவிகக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 205 கோடியே 96லட்சத்து 62 ஆயிரத்து 500  […]

You May Like