fbpx

’தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை’..! பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் முறையீடு..!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 5 பேரையும் சிபிசிஐடி போலீசார், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். சுமார் 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிபதி புஷ்பராணியின் உத்தரவின்பேரில் அவர்கள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 5 பேரும் ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி மனுதாக்கல் செய்தனர்.

’தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை’..! பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் முறையீடு..!

இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், 4-வது முறையாக இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த விழுப்புரம் நீதிமன்றம் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு 5 பேரும் முறையீடு செய்துள்ளனர். விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தங்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து, சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரமில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Chella

Next Post

’இனி எங்குப் பார்த்தாலும் மழைதான்’..! ’குடையை மறந்துறாதீங்க’..! கனமழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Tue Aug 23 , 2022
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, […]

You May Like