fbpx

இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை கிடையாது..! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..! முழு விவரம்..

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 08-ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னை மட்டும் இல்லாமல் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை எதிரொலி காரணமாக அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் மழை பெய்து வரும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே போல் காஞ்சிபுரம், திருவள்ளுர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் சென்னையை பொறுத்தவரை இன்று கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் அறிவித்திருக்கிறார்.

Kathir

Next Post

இந்திய விளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதியில் 239% அதிகரிப்பு...!

Mon Jan 8 , 2024
2022-23-ம் நிதியாண்டில் இந்திய விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறை இறக்குமதியில் 52% சரிவையும், ஏற்றுமதியில் 239% அதிகரிப்பையும் கண்டுள்ளது. 2014-15-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2022-23-ம் நிதியாண்டில் இந்திய விளையாட்டுப்பொருட்கள் தொழில் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இறக்குமதி 52% குறைந்து, ஏற்றுமதி 239% அதிகரித்துள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் உத்தரவின் பேரில் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் நடத்திய “இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டுப் […]

You May Like