தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் எம்டி, எம்எஸ் படிப்புகளை முடித்தவர்கள் 2 வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஊதியத்தோடு கூடிய மகப்பேறு விடுமுறை வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுகுறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள் அரசு ஊழியர்கள் கிடையாது என்றும் அவர்களுக்கு பணி தற்காலிகமானது என்பதால் அவர்களுக்கு நிரந்தர அரசு மருத்துவர்களுக்கு வழங்குவது போல சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு கிடையாது என்று தெரிவித்தார்.
மேலும், மகப்பேறு நாட்கள் விடுப்பு நாட்களாகவே கருத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளார். மேலும், பிரசவத்திற்கு பிறகு இந்த விடுமுறையை பணி செய்து ஈடு செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.