கடலூர் நகர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், கடலூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடிக்கடி வெளி இடங்களில் தனியே சந்தித்த இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பழகி வந்தனர். பின்னர், நாளடைவில் இருவருக்குமான பழக்கம் காதலாக மாறியது.
அதன் பின்னர் நேரில் சந்தித்து, தனியே சுற்றி பழகி வந்தனர். இந்நிலையில், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில், காதலனுக்கு போன் செய்து, மாணவி தன்னுடைய வீட்டில் யாருமில்லை என்றும் வீட்டிற்கு வரும்படியும் அழைத்துள்ளார். மாணவி அழைத்ததன் பேரில் கல்லூரி மாணவரும், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அங்கு தொடர்ந்து சென்று வந்துள்ளார். இந்த நேரங்களில் எல்லாம் கல்லூரி மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இது தொடர்கதையான நிலையில் அந்த மாணவி கர்ப்பமானார். ஆனால், தான் கர்ப்பமடைந்தது குறித்து மாணவிக்கும் தெரியாத நிலையில் பெற்றோரும் இது குறித்து கவனிக்கவில்லை. தற்போது மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, தற்போது மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
பள்ளி மாணவி கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள், கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார், அங்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். மாணவி இன்னும் 18 வயதை பூர்த்தி செய்யாததால், இருவருக்கும் திருமணமும் செய்து வைக்க முடியாது என்று கூறிவிட்டனர். பின்னர் மாணவி கொடுத்த புகாரின் பேரில், மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.