சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், அவரை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன் சிறுமியுடன் உடலுறவு வைத்துக் கொண்டது தெரியவந்தது.
பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த சிறுவன் வீட்டிற்கு வந்து, சிறுமியுடன் உல்லாசமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.