fbpx

’எங்க அம்மாவுக்கே எந்த பிரச்சனையும் இல்ல’..!! ’இந்த மம்மி ஏன் வித்தியாசமா கூவுது’..!! ஷகிலாவுக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை..!!

மணிமேகலை – பிரியங்கா விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இந்த விஷயத்தில் பிரியங்காவை தவிர மற்ற எல்லோருமே வாயைத் திறந்து பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்தில் என்னவோ மணிமேகலைக்கு அதிக சப்போர்ட் இருப்பது போல் தெரிந்தது. சாமானிய மக்கள் எல்லாம் மணிமேகலைக்கு ஆதரவாக இருக்க.. பிரியங்காவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் விஜய் டிவி ப்ராடக்டுகள். பாவனி ரெட்டி, ஷகிலா, அமீர், குரேஷி என ஒவ்வொருத்தராக பிரியங்காவுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர்.

மணிமேகலை உண்மையிலேயே பிரியங்காவின் ஆதிக்கத்தால் ஒதுக்கப்பட்டு அதனால் வெகுண்டு எழுந்து உண்மையை வெளியில் சொல்லியிருந்தால், பாராட்டத்தக்கது. மணிமேகலை முதன்முதலில் வீடியோ போட்ட போது கூட சிங்கப்பெண் என்ற ரேஞ்சுக்கு அனைவராலும் பேசப்பட்டார். ஆனால், குரேஷி தான் முதல் முறையாக பிரியங்காவுக்கு ஆதரவாக தன்னுடைய சேனலில் பேசியிருந்தார். இதை தொடர்ந்து ஷகிலா ரொம்பவும் ஆவேசமாக இந்த விஷயத்தை பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.

ஷகிலாவும் குக் வித் கோமாளியில் இதற்கு முன் போட்டியாளராக இருந்திருக்கிறார். அங்கு அவரை எல்லோரும் ‘ஷகிலா அம்மா’ என்று தான் அழைப்பார்கள். இந்நிலையில் ஷகிலா, தான் வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததை விமர்சித்து இருந்ததற்கு மணிமேகலை பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, “நான் ஓடிப்போய் திருமணம் செய்ததற்கு என் சொந்த அம்மாவிற்கே எந்த பிரச்சனையும் இல்லை. நன்றாக தான் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த மம்மிக்கு என்னவாம்.. வித்தியாசமா கூவுனாங்க” என மணிமேகலை கூறியிருக்கிறார்.

Read More : பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! ரூ.31,000 கிடைக்கும்..!! அரசின் அதிரடி திட்டம்..!! உடனே இதை பண்ணுங்க..!!

English Summary

My own mother had no problem with me running away and getting married. He is talking to me very well.

Chella

Next Post

திருமணமான பெண்கள் ஆடை அணிய கூடாது.. கணவன் மனைவி சிரித்து கூட பேசக் கூடாது ..!! - வினோத கட்டுப்பாடு கொண்ட இந்திய கிராமம்

Tue Sep 24 , 2024
After Marriage, the Bride Doesn't Wear Clothes for a Week; The Groom Has Rules Too-Where Is This Tradition in India?

You May Like