fbpx

லஞ்சம் தராவிட்டால் சிகிச்சை கிடையாது..!! அதிரவைக்கும் புழல் சிறை மரணங்கள்..!! அம்பலப்படுத்திய அன்புமணி..!!

புழல் சிறையில் கையூட்டு தருவதற்கு வசதி இல்லை என்பதாலேயே வாழ வேண்டிய பலர் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சென்னை புழல் மத்தியச் சிறை கைதிகளுக்கு உண்மையாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது சிறைவாழ்க்கை கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்கு நினைத்தாலும் சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரைக்க 50,000 ரூபாயும், உள்நோயாளிகளாக மருத்துவம் பெற ரூ. 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும் அங்குள்ள மருத்துவக் குழுவினரால் கையூட்டாக வசூலிக்கப்படுகிறது என்று ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கையூட்டு தருவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத கைதிகள் உண்மையாகவே கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சிறைக்கு வெளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் கிடைக்காது. இதனால், சரியான நேரத்தில் உரிய மருத்துவம் கிடைக்காமல் சில கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருப்பது கூடுதல் வேதனையளிக்கிறது. சிறைகளில் கிடைக்க வேண்டிய மருத்துவ வசதி கையூட்டு தராததால் மறுக்கப்படுவதும், கையூட்டு கொடுப்பதால் மருத்துவமே தேவைப்படாத பலர் வெளி மருத்துவமனைக்கு சென்று அனைத்து வசதிகளுடன் தங்கியிருப்பதும் சட்டத்தையும், அறத்தையும் கேலிக்கூத்தாக்கும் செயல்.

புழல் மத்திய சிறையில் கையூட்டு தர மறுத்ததால், மருத்துவ வசதி மறுக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர்? வெளி மருத்துவமனைகளில் மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரைக்க கையூட்டு வசூலிக்கும் வழக்கம் எவ்வளவு காலமாக உள்ளது? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். மருத்துவம் கிடைக்காமல் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும் முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Chella

Next Post

இஸ்ரேல் - ஹமாஸ் போர்..!! தங்கத்தின் விலை அதிரடி உயர்வு..!! வாடிக்கையாளர்கள் அதிருப்தி..!!

Thu Oct 19 , 2023
ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 […]

You May Like