பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இதனால் பெரும் ஆர்வமுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், இதற்கு முக்கிய காரணம் அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள்தான்.
அதாவது இந்த கச்சேரிக்கு மொத்தமாகவே 35,000 டிக்கெட்டுகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், இவர்கள் சுமார் 2 முதல் 3 லட்சம் டிக்கெட்டுகளை விற்றதாக கூறப்படுகிறது. இதனால் குறித்த இசைக்கச்சேரி நடந்த இடத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ரகுமானை நம்பி பணத்தை இழந்து விட்டதாக கூறி அவர் மேல் வெறுப்பைக் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரகுமான் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது “இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியில் மலிவான அரசியல் செய்கிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தான் முழுத்தவறு. ஆனால், அது தெரிந்தும் என் தந்தை மோசடி செய்ததை போல் பேசுகிறர்கள். வெள்ளம், கோவிட் காலங்களில் இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டியவர் தான் என் தந்தை” என தனது தந்தை மேல் தப்பு இல்லை என்பதனைக் கூறி மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.