கோயில் வழிபாடுகளில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை மதுரை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.. இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள்“ கோயில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தலம்.. கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கோயிலில் வழிபாடு செய்ய உரிமை உள்ளது..
ஒருவரின் சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது.. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.. இந்த வழக்கில் பட்டியலின சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரும் உட்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்து விழா கொண்டாட வேண்டும்.. எனவே அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்..” என்று தெரிவித்தனர்..