fbpx

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..!! குடையை மறந்துறாதீங்க..!! அசௌகரியமும் இருக்கும்..!! வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (மார்ச் 19) முதல் மார்ச் 25ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 20ஆம் தேதி வரை அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : வாகன ஓட்டிகளே..!! HSRP நம்பர் பிளேட் கட்டாயம்..!! போலீசிடம் சிக்கினால் அபராதம் கட்டணும்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

English Summary

The Meteorological Department has stated that there is a possibility of rain in Tamil Nadu for 7 days starting today.

Chella

Next Post

ஒரு நாளைக்கு 3 GB டேட்டா.. வரம்பற்ற அழைப்புகள்.. ரூ.199 மட்டுமே..!! BSNL-ன் சூப்பர் பிளான்

Wed Mar 19 , 2025
BSNL: 3 GB data per day, unlimited calls.. Rs. 199 only

You May Like