fbpx

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய வார்னிங்..!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Chella

Next Post

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!! ஜூலை 2 முதல் கலந்தாய்வு..!! அமைச்சர் அறிவிப்பு..!!

Mon Jun 26 , 2023
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 54 ஆயிரம் இளநிலை படிப்புகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். […]

You May Like