fbpx

பிரசவத்திற்கு பிறகு தொப்பையை குறைக்க இந்த 3 பொருட்கள் போதும்..!! பெண்களே இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க..!!

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவரும் பல வகையான முயற்சிகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. இதில் பலருக்கு ஜிம்மிற்கு சென்று வியர்வை சிந்தி வொர்க் அவுட் செய்ய நேரம் கிடைப்பதில்லை. எனவே உங்களின் அதிக எடையைக் குறைக்க காலையில் சில நல்ல பழக்கங்களைப் பின்பற்றலாம். இந்தப் பயிற்சிகள் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். அவை என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது தொப்பையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் தொப்பையை மட்டுமல்ல உடல் பருமனையும் குறைக்க எளிதான மற்றும் பிரபலமான செய்முறை எலுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் வெந்நீர் கலந்து பருகுவது ஆகும். எலுமிச்சையில் பல வகையான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உடலை உள்ளே இருந்து வலிமையாக்குகின்றன. இதைத்தவிர எலுமிச்சையில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து, கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. காலையில் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து குடிக்கவும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவை உட்கொள்வது நாள் முழுவதும் பசியைக் குறைக்க உதவும். அத்தகைய காலை உணவு நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. அடிக்கடி ஏற்படும் பசியை விலக்கி வைக்கிறது. இதன் விளைவாக, உணவு உட்கொள்ளல் குறைகிறது. அதனால் முட்டை, தயிர் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். காலையில் தண்ணீர் குடிப்பதைத் தவிர, ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க முயற்சிக்க வேண்டும். இது தொப்பை கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

குளிர்ச்சியான பண்புகளைக் கொண்ட சீரகம் வயிற்றை குளிர்விக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, எடை இழப்புக்கு உதவுகிறது. சீரகத்தில் இயற்கையான நச்சு நீக்கும் கூறுகள் நிறைந்துள்ளன. சீரகம் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் செயல்படுகிறது. வெறும் வயிற்றில், சீரகத்தை தண்ணீருடன் கொதிக்க வைத்து குடிக்கலாம். வெறும் வயிற்றில் குடிப்பதோடு, சீரகத் தண்ணீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.

Read More : ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்..!!

English Summary

Cumin also works to control blood sugar levels in the body. You can boil cumin with water and drink it on an empty stomach.

Chella

Next Post

உடலில் நோயின்றி வாழ சூப்பரான ஹெல்த் டிப்ஸ்..!! இதை மட்டும் ஃபாலோ பண்ணி பாருங்க..!! உங்களுக்கே வித்தியாசம் தெரியும்..!!

Sun Feb 2 , 2025
A healthy and hygienic diet plays a very important role in ensuring that we always remain healthy and disease-free.

You May Like