சிலருக்கு சிறிது நேரம் வேலை பார்த்தாலே மூட்டுகளில் வலி ஏற்படும். கூடவே உடல் சோர்வும் வந்துவிடும். இந்த மூட்டு வலி பொதுவான பாதிப்பு தான் என்றாலும் குணப்படுத்திக் கொள்ளத் தவறினால் மோசமான பின்விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே மூட்டு வலி, எலும்பு தேய்மானம், முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவற்றை குணப்படுத்தக் கூடிய பொருட்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* கருப்பு கொண்டை கடலை
* கோதுமை
* வேர்க்கடலை
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் கருப்பு கொண்டை கடலை, கோதுமை, வேர்க்கடலை ஆகிய மூன்றையும் தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணியில் இந்த பொருட்களை சேர்த்து மூட்டை கட்டி இரண்டு இரவு வைக்க வேண்டும்.
- பின்னர் பார்த்தால், அந்த பயிர்கள் முளைகட்டி இருக்கும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பால் போல் நன்கு அரைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து பருக வேண்டும்.
- தினமும் காலை டீ, காபிக்கு பதில் இதை 1 கிளாஸ் குடித்து வந்தால் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவை குணமாகும்.
தேவையான பொருட்கள் :
* வெள்ளை சோளம்
* கம்பு
* ராகி
* கருப்பு உளுந்து
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்து, வெள்ளை சோளம், ராகி, கம்பு ஆகியவற்றை சம அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்ய வேண்டும்.
- பிறகு ஒரு காட்டன் துணியில் போட்டு நன்கு காயவைத்து எடுத்து அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கி, அரைத்த பொடி 2 ஸ்பூன் அளவு மற்றும் கருப்பட்டி தேவையான அளவு சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து குடித்து வந்தால் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.