fbpx

இன்னைக்கு இந்த 4 மாவட்டங்கள் தான் டார்கெட்..!! புரட்டி எடுக்கப்போகும் கனமழை..!!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (டிச.12) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் டிச.16ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

முன்னாள் அரசு ஊழியரின் மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து கூட்டு பலாத்காரம்..!! விசாரணையில் அதிர்ச்சி..!!

Tue Dec 12 , 2023
உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள கடையில் இளம்பெண் ஒருவர் தேனீர் அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்போது, கடையில் உள்ள சத்யா என்ற நபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், தன் மொபைல் போனில் சார்ஜர் தீர்ந்ததாகவும், சார்ஜ் போட உதவும்படி சத்யாவிடம் கேட்டுள்ளார். உடனே தனக்கு தெரிந்த நண்பரின் காரில் சார்ஜ் இருப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். இதை நம்பி, அந்த […]

You May Like