fbpx

”இந்த 5 மாவட்டங்கள்தான் இன்னைக்கு டார்கெட்”..!! காத்திருக்கும் கனமழை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், வரும் 30, 31ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செப்.1ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செப்.2, 3ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’புருஷன் வேலைக்கு போனதும் கள்ள புருஷனை வீட்டிற்கு அழைத்த மனைவி’..!! ’உல்லாசத்தை நேரில் பார்த்த மாமனார்’..!! அதிர்ச்சி சம்பவம்

Mon Aug 28 , 2023
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கல் இந்திரா காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கனகராஜ் (25). கருத்தானூரை சேர்ந்த மங்கள்ராஜ் மகள் கவிக்குயில் (22). இவர் கனகராஜின் சொந்த அத்தை மகள் ஆவார். கனகராஜுக்கும் கவிக்குயிலுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் ஊருக்கு வெளிப்புறம் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், மனைவி கவிக்குயில் […]

You May Like