fbpx

தமிழ்நாட்டில் புதிதாக உதயமாகும் 5 மாவட்டங்கள் இவைதான்..!! அடடே இந்த ஊரும் மாவட்டமாகிறதா..?

தமிழ்நாட்டில் தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் 5 புதிய மாவட்டங்கள் இந்தாண்டில் உருவாக உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பால் என்றும் கூறப்படுகிறது. அதன்பிறகு தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 43 ஆக உயரும்.

அரசு அறிவிப்பின்படி, கடலூர் மாவட்டம் இரண்டாக பிரிந்து விருத்தாச்சலம் மாவட்டம் புதியதாகவும், திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாகப் பிரித்து செய்யாறு மாவட்டம், கோவை இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம் இரண்டாம் பிரித்து கும்பகோணம் மாவட்டம், சேலம் மாவட்டம் இரண்டாகப் பிரித்து ஆத்தூர் மாவட்டம் என்று 5 புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளது. மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் அரசின் மேலாண்மை பணிகள் எளிதாக்கப்பட்டு பணிகள் விரைவாக நடக்க உறுதுணையாக இருக்கும்.

Chella

Next Post

ஹவுதிக்கு எதிராக மூன்று தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா..!

Sat Jan 20 , 2024
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து 3 வெற்றிகரமான தற்காப்புத் தாக்குதல்களை” நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. இதன்படி செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை […]

You May Like