fbpx

டிசம்பரில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் இவை தான்.. பணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுமாம்..

டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் தங்கள் ராசிக்கு இந்த மாதம் எப்படி இருக்கும் என்று பலரும் ஆவலுடன் காத்திரிக்கின்றனர். டிசம்பரில் சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறுவதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே இருக்கும். சில ராசிகள் இதனால் நல்ல பலன்களை பெற்றாலும், சிலர் மோசமான பலன்களை பெறக்கூடும்.

அந்த வகையில் டிசம்பர் மாதம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ராசிகள் நிதி நெருக்கடிகள் மற்றும் உடல்நலக் கவலைகளை சந்திக்க நேரிடும்,

மிதுனம் : டிசம்பர் மாதத்தில் சொந்த தொழில் செய்வோருக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. இது மன அமைதியை பாதிக்கும். வருமானம் குறைவதும் செலவுகள் அதிகரிப்பதும் சாத்தியமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கும் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும், இது உடல்நலத்தை எதிர்மறையாக பாதிக்கும். பணியிடத்தில் ஒத்துழைப்பு இல்லாததாலும் அழுத்தத்தாலும் சிரமங்கள் ஏற்படலாம். யோகா, தியானம் மற்றும் பிராணயாமம் போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

கடகம் : சுக்கிரன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் உடல்நலத்தை பாதிக்கும். எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். டிசம்பரில் எலும்பு மற்றும் வலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணை உடன் மோதல் போக்கு நீடிக்கும். கருத்து வேறுபாடுகள் அல்லது தகராறுகள் ஏற்படலாம்.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு சேமிப்பு குறையக்கூடும். எதிர்பாராத செலவுகள் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுவது நல்லது. சொந்த தொழில் செய்வோருக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது. ண்டியிருக்கும். உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு : சுக்கிரனின் எதிர்மறை செல்வாக்கால் தனுசு ராசிக்காரர்கள் மன அமைதியை இழக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.. டிசம்பர் 2 மற்றும் 28 க்கு இடைப்பட்ட காலம் சவாலானது. அலுவலக மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்து நல்லது.

கும்பம் : சுக்கிரன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும், ஆனால் தொழில் வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வணிக லாபத்திற்காக புதிய திட்டங்களை செயல்படுத்துங்கள். பல சவால்கள் ஏற்படும். நீங்கள் செய்யும் தொழிலில் போதிய வருமானம் இல்லாதது கவலையை ஏற்படுத்தும்.

English Summary

In this post, we will see which zodiac signs should be careful in December.

Rupa

Next Post

சென்னையை நெருங்கும் புயல்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..?

Wed Nov 27 , 2024
The Chennai Meteorological Department has stated that there is a possibility of heavy rain in Thanjavur, Thiruvarur, Nagapattinam, Mayiladuthurai and Pudukkottai districts today.

You May Like